Description
ஒரு நாள் தெருவில் ஒரு நாய் திடீரென்று எங்கிருந்தோ வந்தது, அவன் அங்கேயே தங்க முடிவு செய்கிறான். எனவே எல்லோரும் அவனுக்கு பெயர் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அவனை லட்டூன்னு கூப்பிட முடியாது ஏன்னா அவன் அவ்வளவு ஒல்லி, பஞ்சு மிட்டாயாக இருக்க பஞ்சுபோன்ற உரோமம் இல்லை, மேலும் ரேம்போவாக இருக்க முடியாத காரணம், அந்த அளவுக்கு அதிகமாக பயந்த நாய்… இந்த நாயை அவர்கள் என்னவென்று அழைப்பார்கள்?
இந்த கதையில் நடக்கும் வேடிக்கையான சம்பவத்தின் மூலம் ஒரு வழக்கமான இந்திய தெருவில் இருக்கும் சராசரி மக்களை சந்திப்பதோடு, நட்பை நாடும் நாயையும் சந்திக்கலாம்.
சிறுவயதில் மேனகா ராமன் கற்பனை கதைகள் எழுதினார். அப்போதிலிருந்து அவர் பல சித்திரப்புத்தகங்கள். சிறுகதைகள், அந்தியாயப்புத்தகங்கள் மற்றும் இளைஞர்களுக்காக ஒரு நாவவையும் எழுதியுள்ளார். அவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார் மற்றும் தனது நாய்குட்டியுடன் நடை செல்ல விரும்புகிறார். இது அவர் தூலிகாவிற்கு எழுதிய முதல் புத்தகம் ஆகும்.
ப்ரொய்தி ராய் தற்போது வசிக்கும் சாந்திநிகேதனில் நுண்கலைகளில் பட்டம் பெற்றவர். இந்திய குழந்தைகள் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக மதிப்புமிக்க பிக் விட்டில் புக் விருதை வென்றவர். தூலிகாவுக்காக அவர் எழுதி பாராட்டபட்ட புத்தகங்களில் இஸ்மத்தின் ஈத் போன் பிபியின் காட்டில் மற்றும் தம்பியுடன் ஒரு உல்லாச நடை ஆகியவை அடங்கும். சித்திரங்கள் வரைவதோடு, ப்ரொய்தி வேதனையுடன் வாழும் விலங்குகளுக்கு உதவுகிறார். மற்றும் மீட்கப்பட்ட 20 நாய்களுடன் வாழ்கிறார்.
ஜீவா ரகுநாத் சர்வதேச கதை சொல்லி மற்றும் சிறுவர்கள் எழுத்தாளர்.
Reviews
There are no reviews yet.